தனுஷ், விஜய்க்கு நன்றி - காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமாவில் வரலாற்று சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி ரகுராம். 2002ல் பிரபு தேவா ஜோடியாக சார்லி சாப்ளின் படத்தில் அறிமுகமானார். சில படங்களுக்குப் பிறகு அப்பா வழியில் டான்ஸ் மாஸ்டர் அவதாரம் எடுத்தார்.
ஷங்கர், ஏ.எல். விஜய் போன்ற அனைத்து முன்னனி இயக்குநர்களின் பல படங்களில் இவர் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
"யாதுமாகி நின்றாய்" படம் மூலம் இப்போது இயக்குநர் ஆகியிருக்கிறார். டான்ஸை மையமாகக் கொண்டு டான்ஸர்களின் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கே. எஸ். ரவிகுமார் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். என நிறைய சர்ப்ஃரைஸ் விசயங்களை சொன்னார் இயக்குநர் காயத்ரி ரகுராம். மேலும் படம் இயக்கும் முறையை ஏ.எல். வியய்யிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றார்.
தனுஷ், ஏ.எல். விஜய் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பத்திரக்கையாளர் சந்திப்பில் நன்றி தெரிவித்தார் காயத்ரி ரகுராம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
