Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தனுஷின் ‘பவர் பாண்டி’கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.!

•On April 7, 2018
10
Share
தனுஷ் இயக்கி, நடித்த ‘பவர் பாண்டி’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. தனுஷ் முதன்முறையாக இயக்கிய படம் ‘பவர் பாண்டி’. வரிவிலக்குக்காக இந்தப் படம் ‘ப. பாண்டி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷும், ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். தமிழில் ஹிட்டான இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷ் நடிக்க, தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்கிறார். ரேவதி வேடத்தில் நடிக்க சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.