Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிமானிட்டைசேசன் பாடல்! வருத்தம் தெரிவித்த நடிகர் !

•On November 13, 2017
Simbu
Share
Simbu நடிகர் சிம்பு அண்மையில் Demonitisation தொடர்பான பாடல் ஒன்றை பாடி வெளியிட்டார். இந்தப்பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிம்வுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாடலை பாடியது குறித்து நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் பண மதிப்பிழப்பு பாடலை தான் எழுதவில்லை என்றும் தனது படத்திலும் அந்தப்பாடல் இடம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு பாடகன் என்றும் பாடுவது தனது தொழில் என்றும் சிம்பு கூறியுள்ளார். இந்த பாடலுக்காக பிரச்சனை வரலாம் என்று வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது பொது மக்கள் பழைய பணத்தை மாற்றுவது, ஏடிஎம் மையங்களில் கால்கடுக்க நின்றது போன்ற சில பிரச்சனைகள் இருந்ததாகவும், சிலருக்கு அது நன்மையையும், சிலருக்கு அது கஷ்டத்தையும் கொடுத்தாக சிம்பு தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு பாடலில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்றும், யாரும் அந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள நடிகர் சிம்பு இந்தப் பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.