Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டிசம்பரில் வருகிறான் ஆமாண்டா பேப்பயலே 'ரிச்சி' !

•On November 16, 2017
IMG_1606
Share
IMG_1606Nivin-Pauly-s-Richie-firNews397 'பிரேமம் ', 'பெங்களூரு டேஸ்' உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் தமிழ்மொழி ரசிகர்களிடையே பரிட்சயமாயிருந்த நிவின் பாலி தற்போது தமிழில் 'ரிச்சி' என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.  , இந்தப்படத்தில் இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நட்டி நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு பாண்டி குமார்  என முற்றிலும் புதுமையான களத்துடன் தமிழில் அறிமுகமாகிறார் நிவின்பாலி. 4O9A0312 சமூக வலைதளங்களில் எல்லோராலும் இந்தப் படத்தின் டீஸர் பெரிதும் பாராட்டப்பட்டு உள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி "ரிச்சி" வெளியாகுமென தற்போது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் "ரிச்சி" படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்து வெளியிடும் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்று இருக்கிறார் என்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.  , "தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. நான் வெளி இட்ட முந்தைய படங்களை போலவே " ரிச்சி" படத்தின் கதையும், படமாக்கப் பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும் . நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்" என்று பெருமையுடன் கூறினார் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.