Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வெளியாகும் கோலமாவு கோகிலா.!

•On August 14, 2018
nayantara
Share
தமிழ் சினிமாவின் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் ஆகஸ்ட் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நயன்தாராவுடன் யோகி பாபு, விஜய் டிவி தொகுப்பாளி ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த வேலைக்காரப் பெண்ணாக நடித்துள்ளார் நயன்தாரா. இதை அறிமுக இயக்குநரானா நெல்சன் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலையிலேயே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் படம் வெளியாக இருக்கிறது ரஜினி,கமல், அஜித், விஜய் போன்ற முக்கிய நடிகர்களின் படங்கள் தான் அதிகாலையில் வெளியாகும். இதற்கு இணையாக தற்போது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படமும் படமும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.