Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜோதிகாவுக்கு ஜோடியாக சூர்யாவின் வில்லன்..!

•On October 25, 2014
singam_2_yamudu_2_movie_photos_suriya_anushka_2cd481b
Share

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர்-17ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

பெண்ணின் பலத்தை, மகத்துவத்தை உணர்த்தும் விதமாக மலையாளத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்தப்படம் நீண்ட இடைவேளைக்குப்பின் மறு பிரவேசம் நிகழ்த்தும் ஜோதிகாவிற்கு ரீ-எண்ட்ரியாக அமைந்திருப்பது மிகவும் எதார்த்தமான ஆனால் அதிசயமான ஒன்று. இந்தப்படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார் ரகுமான். சிங்கம்-2வில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த அதே ரகுமான் தான்.

இந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. தமிழில் இந்தக்கதையை அதன சாராம்சம் கெட்டுவிடாமல அப்படியே கொடுக்கவேண்டும் என்பதற்காக மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழிலும் இயக்குகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.