Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜோசியத்தை நம்பும் வாலிபனுக்கு நேர்ந்த கதி என்ன ?

•On December 4, 2019
Panjangam
Share

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் தயாரித்து இயக்கும் படம் 'திருவாளர் பஞ்சாங்கம்'. இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்ய ஜேவி மற்றும் நரேஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பினை நாகராஜ் கவனிக்கிறார். ஆர்ட் டைரக்டராக சோலை மற்றும் அன்பு பணிபுரிகின்றனர்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் மலர்விழி நடேசன் கூறுகையில்,

"இப்படத்தில் நாயகனாக 'ஆனந்த் நாக்' நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன், சுதா, கௌதம் மற்றும் சி.எம் பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு படித்து பட்டம் பெற்ற அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் வாலிபன் ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால் அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.

அப்படி தீடிரென ஒரு பிரச்சினை வர, ஜாதகத்தை கடைபிடித்து அந்த பிரச்சனையில் இருந்து வெளி வருகிறானா? அல்லது ஜாதகம் அவனை கைவிடுகிறதா? என்பதை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறேன். கதாநாயகனின் ஏழு நாட்கள் பயணம் தான் இப்படம்.

இப்படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.