Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெ.மரணம்: நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்?

•On October 25, 2017
j
Share

 j

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த மாதம் 25-ம் தேதி அறிவித்தது. சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கலச மஹாலில் நீதிபதி ஆறுமுகசாமிக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி காலை அந்த அலுவலகத்துக்கு சென்ற நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணை அறை எப்படி இருக்க வேண்டும் என்று சில ஆலோசனைகளை கூறினார். அதைத் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி 25-ம் தேதி (இன்று) விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் நேற்றுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அவர் தனது விசாரணையை இன்று தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.