ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படத்தில் இணையும் அப்பா, மகன் கூட்டணி..!

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார். இது ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம்.
இந்த படத்துக்கு ஸ்டண்ட் சிவா சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். மேலும் அவருடன் இணைந்து அவரது மகன் கெவினும் இந்த காட்சிகளை வடிவமைக்கிறார்.
இந்த கூட்டணி ஏற்கனவே அடங்க மறு படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
