ஜெயம் ரவி நடிக்கும் 'டிக்:டிக்:டிக்' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு!

வனமகன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கவனம் செலுத்தி வரும் படம் 'டிக்:டிக்:டிக்' இப்பாடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்று (ஜூலை 17) காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
"மிருதன்" பட இயக்குனரான சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் ஜெயம் ரவி அவர்களின் மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை ஜபக் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் D.இமான் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து அதற்குள் நடைபெற்று வருகிறது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
