ஜெயக்குமார் மட்டுமல்ல, இன்னும் 2 அமைச்சர்கள் - பரபரப்பை கிளப்பும் வெற்றிவேல்..!

சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும், அமைச்சர் ஜெயக்குமாரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச வீடுகளை கொடுத்து அவர் சரிகட்டினார். அந்த பெண்கள் தற்போது குடும்பமாகி வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, அதுபற்றி பேசினால் பலரின் வாழ்க்கை நாசமாகும். பெண்கள் விஷயத்தில் அவர் எப்படியென வட சென்னைக்கே தெரியும். விரைவில், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியே வருவார்கள் என அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதேபோல், ஜெயக்குமார் மட்டுமல்ல..
இன்னும் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் பெயரை இப்போது கூற முடியாது என அவர் தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
