ஜூலை 21ல் வெளியாகும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் "மீசைய முறுக்கு"

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் படம் ‘மீசைய முறுக்கு’. இந்தப் படத்துக்கு, பாடல்கள் எழுதி இவரே இசையமைத்துள்ளார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் இருந்து, எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இசையமைப்பாளராக ஆனார் என்பதைத்தான் படமாக எடுத்துள்ளார்.
இந்தப் படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். விவேக் மற்றும் விஜயலட்சுமி இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சுந்தர்.சி தயாரித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தினை அனைவரும் திரையரங்குகளில் கண்டுகளியுங்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
