ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்'

தெலுங்கில் உருவாகவுள்ள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், தமிழில் கமலகாசனும் தொகுத்து வழங்கவுள்ளார்.
சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தமிழில் கமலகாசன் தொகுத்து வழங்கியூள்ளார். இந்நிகழ்ச்சியைப் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இம்மாத இறுதியில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளதாக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கிலும் இதே நிகழ்ச்சி உருவாகவுள்ளது. இதனை முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக மாபெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதன.
இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் அதுவும் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப் போகிறார்கள். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகிறார்கள் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரசியம். அவர்களுக்கு மொபைல் போன் கிடையாது, லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத்தொடர்பும் கிடையாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த ஒரு உபகரண பொருட்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
