ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்...

ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டா என்னடா சொல்றான் பாக்குறிங்களா அது என்னனு பர்ஸ்ட்ல சொல்லிட்டா ஆர்வம் இருக்காது முழுசா படிங்க தெரியும்.
அதாவது கடந்த ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடித்த ஜனதா கேரேஜ் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கொரட்டலா சிவா அந்த படத்தை இயக்கியிருந்தார். அதையடுத்து தற்போது கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜெய் லவகுசா படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த படத்தில் முதன்முறையாக அவர் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். ராக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை 3.15 மணிக்கு வெளியானது. பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ஜூனியர் என்டிஆர்., ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் கொண்டு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதோடு ஜூனியர் என்டிஆருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அதையும் அவரது ரசிகர்கள் டிரெண்ட்டிங்கில் கொண்டு வந்துவிட்டனர். ஆக பிறந்தநாளோடு தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
