ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்த "ஜெய் லவகுசா" பட டீசர் ஜூலை 6 ல் வெளியீடு!

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. இயக்குனர் பாபி இயக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெய், லவ குமார், குசால் குமார் என்று மூன்று மாறுபட்ட வேடங்களில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதனால், இந்த படத்தின் மூன்று வேடங்களுக்கும் ஒவ்வொரு டீசராக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், வருகிற ஜூன் 6-ந்தேதி ஜெய் கேரக்டரின் டீசரை வெளியிடுகிறார். அன்றைய தினம் மாலை 5.22 மணிக்கு அந்த டீசர் வெளியிடப்படுகிறதாம். அதன்பிறகு மற்ற இரண்டு கேரக்டர்களின் டீசரையும் ஒவ்வொன்றாக வெளியிடுகிறார்களாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
