Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜீவா நடிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு படைப்பு

•On November 21, 2019
Seeru
Share

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கச்சிதமான முறையில் திட்டமிட்டு, அதற்கு முறையான செயல்வடிவம் கொடுத்து, 2019 ஆம் ஆண்டு தனது ஒவ்வொரு தயாரிப்பிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் வரிசையாக வெளிவர காத்திருக்கின்றன. இவற்றி்ல் ரத்தினசிவா இயக்கத்தல் ஜீவா நடித்த 'சீறு' படமும் ஒன்று. நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய முழுமையான வணிக ரீதியிலான படம் இது.
'சீறு' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகிய இருவரையும், இந்தப் படத்தில் பாட வைத்திருக்கிறார். விவேகா எழுதிய இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் நன்றாக அமைந்ததற்கு, படக்குழுவில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் 'சீறு' படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ரியா சுமன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

2019ஆம் ஆண்டு 'எல்.கே.ஜி.', 'கோமாளி', 'பப்பி' என்று ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்தது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது. அதே சமயம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்', கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் வருண் பிரதான வேடத்தில் நடிக்கும் 'ஜோஸ்வா' ஆகிய படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ இன்டர்நேஷனல் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.