ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் ஜி.வி.பிரகாஷ். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. லாவண்யா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தமிழ் ரீமேக்கிற்கு '100% காதல்' என பெயரிட்டுள்ளது படக்குழு. இதனை '100% லவ்' இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ளார். நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '100% லவ்'. 2011-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
