Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜி.எஸ்.டியை ரத்து செய்யாவிடில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு!

•On November 11, 2017
MatchBox_Liveday
Share

2924696161498939104945665632DSC123

தீப்பெட்டி மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளோம் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 , கடந்த ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசர கதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். MatchBox_Liveday இதற்கிடையே, அசாமில் நேற்று நடந்த 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டது. விவசாய டிராக்டருக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. இதுபோல் 178 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது தீப்பெட்டி மீதான ஜி.எஸ்.டி. வரி சதவிகிதமாக உள்ளது. இந்நிலையில், தீப்பெட்டி மீதான 18 சதவிகித் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூடும் சூழல் ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், தீப்பெட்டி மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். அப்படி 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தமிழகத்தில் இயங்கி வரும் தீப்பெட்டி ஆலைகளை மூடும் சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.