ஜப்பானில் உள்ள ஒரு தீவில் பெண்களுக்கு அனுமதி இல்லை !

ஜப்பானில் உள்ள ஒகினோஷிமா என்ற தீவு மிகவும் பிரபலமாகும். இந்த தீவிற்கு செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதியுள்ள ஜப்பானின் ஒகினோஷிமா தீவு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கியூஷு மற்றும் கொரியன் என்ற பகுதிக்கு நடுவே அமைந்துள்ள இந்த ஒகினோஷிமா தீவு பார்ப்போரை பிரம்மிக்க வைக்கும் அளவுக்கு அழகாக காட்சியளிக்கிறது. மொத்தமே 700 சதுரமீட்டர் கொண்ட இந்த தீவு பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலும் இத்தீவில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு இங்கே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. எனினும் இந்த தீவுக்கு செல்ல அதிக கட்டுப்பாட்டுடன் ஆண்டுக்கு 200 ஆண்கள் மட்டுமே அதுவும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
பல கட்டுப்பாடுகள் இருந்தும் இத்தீவிற்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் சில தவறுதல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். பல அரியவகை பொருட்களும் ஜப்பானின் பழைய கால பொக்கிஷங்களும், அந்த தீவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை அந்நாட்டின் கலாச்சார பழக்கவழக்கங்களை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த தீவிலிருந்து எந்த பொருளையும் எடுத்து செல்லவும், விட்டுச்செல்லவும் அனுமதியில்லை என அந்த தீவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
