Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சோனியா காந்தியிடம் பேசியது என்ன? கமல் ஹாசன் பேட்டி..!

•On June 21, 2018
bbb3ff516e06d16b152f906fbfd2e23a
Share

நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக்கு அஸ்திவாரமாக கருதப்பட்ட நிலையில் இன்று அவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசியுள்ளார்.

ராகுல்காந்தி, சோனியா காந்தியுடன் அடுத்தடுத்து கமல் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சோனியா காந்தியுடனான சந்திப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல், 'நேற்று ராகுல்காந்தியை சந்தித்து பேசியதை தொடர்ந்து இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். மரியாதை நிமித்தமாகவே சோனியா காந்தியை சந்தித்துப் பேசினேன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன்' என்று கூறினார் மேலும் கூட்டணி குறித்து சோனியாவிடம் எதுவும் பேசவில்லை என்றும், அதுகுறித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் இது இல்லை என்றும் காலம் வரும்போது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்' என்றும் கமல் கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.