Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த்

•On August 31, 2020
Echo
Share

இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் "எக்கோ".

அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார்.

ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏக்நாத் பாடல்கள் எழுத, ராதிகா நடன வடிவமைப்பாளராக உள்ளார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
டேஞ்சர் மணி சண்டை பயிற்சிக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பினை செய்கிறார்

செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.