Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்கும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்கும் நாளை மோதல்!

•On August 14, 2017
tnpl1
Share
tnpl1 சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மோதும். ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தூத்துக்குடி பேரியாட்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் கோபி நாத், தலைவன் சற்குணம், சசிதேவ், கார்த்திக், வசந்த் சரவணன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சாய்கிஷோர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். யோமகேஷ், அலெக்சாண்டர் ஆகியோரும் முத்திரை பதிக்க கூடியவர்கள். கேப்டன் சதீஷ், அந்தோணி தாஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடந்த ஆண்டு 2 முறையும், தற்போது ஒரு முறையும் தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் தோற்று இருந்தது. அதற்கு நாளைய ஆட்டத்தில் பழி தீர்க்குமா? என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மோதிய அன்றைய ஆட்டத்தில் வென்று இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி, கேப்டன் தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.