Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சேனாதிபதி பொறுப்பு கிடைத்துள்ளது கிஷோருக்கு..!

•On August 8, 2014
kishore (3)
Share

தான் ஏற்றுக்கொண்ட எந்த கதாபாத்திரமானாலும் அதற்கு தனது நடிப்பால் நியாயம் செய்பவர் கிஷோர்.. இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்று தெரிந்தாலே படம் பார்க்க வருவதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.

அப்படிப்பட்ட கிஷோர் தற்போது ‘இளமி’ என்ற சரித்திர படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் அவர் இது வரை ஏற்று நடித்திராத வேடம் இது. இதில் ஒரு அரசாங்கத்தின் சேனாதிபதியாக நடிக்கிறார்.. பல காட்சிகளில் அவர் குதிரையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் குதிரையேற்ற பயிற்சியும் அவர் செய்து வருகிறார்.

ஏற்கனவே கன்னட மொழியில் உருவாகியுள்ள ‘வாஸ்கோடகாமா’ என்கிற சரித்திரப்படத்திற்காக குதிரைப்பயிற்சியை கிஷோர் பழகி இருந்ததால் இந்தப்படத்தில் அது அவருக்கு எளிதாக கைகொடுத்துள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகன் யுவனும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்குக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்

பதினெட்டாம் நூற்றாண்டு காலகட்டத்தை உள்ளடக்கிய கதை என்பதால் கிஷோரின் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் பேசப்பட்ட தமிழ் வேறு மாதிரியான உச்சரிப்பாக இருக்கும் என்பதால் கிஷோருக்கு வசனங்களும் அதற்கான அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஜூலியன் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.