Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

செப்டம்பரில் சாமியின் ஆட்டம் ஆரம்பம்

•On August 11, 2017
saamy2
Share
saamy2 ஹரி இயக்கத்தில், விக்ரம் - த்ரிஷா நடிப்பில் ஏற்கெனவே வெளியான படம் 'சாமி'. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. விக்ரம் ஹீரோவாக நடிக்க, த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அத்துடன், பிரபு, டெல்லி கணேஷ், ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த விவேக்கிற்குப் பதில், இந்தப் பாகத்தில் சூரி நடிக்கிறார். செப்டம்பர் மாதம் தொடங்கும் படப்பிடிப்பை, ஜனவரியில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தொடங்கும் படப்பிடிப்பு, டெல்லி, நொய்டா, ஆக்ரா, ஜெய்ப்பூர், நைனிடால், காத்மாண்டு ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும், திருநெல்வேலி, பழனி, சிவகாசி மற்றும் கேரளா ஆகிய இடங்களிலும் நடைபெற உள்ளது. அத்துடன், மிசெளரி மற்றும் சில வெளிநாடுகளில் பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.