Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்!...

•On May 14, 2017
WhatsApp-iOS-update-499495
Share
WhatsApp-iOS-update-499495 சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமில்லாத குடிநீர் கேன்கள், குளிர்பானங்கள், தரமற்ற தயிர், மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம். கார்பைடு கல்வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் உள்ளிட்டவை தொடர்பாக புகார்களையும் தெரிவிக்கலாம். 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், 044 - 23813095 என்ற அலுவலக எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். commrfssa@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.