Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு-முதல்வர் அறிவிப்பு..!

•On June 29, 2018
119679-eda-pti
Share

சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி செலவில் அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் ஆற்றிய உரையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவகம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும் என்றார்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றார். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறும் என்றார்.

 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.