Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்னையில் விநாயகர் சிலைகள்: உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டுப்பாடுகள்

•On August 23, 2017
mad vina
Share
mad vina வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தில் சென்னை உயர்நீதி மன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை * 10 அடிக்கு மேல் விநாயகர் சிலையை அமைக்கக்கூடாது. * எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் விநாயகர் சிலை அமைக்கக்கூடாது. * களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். * சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது. * காவல்துறை அனுமதிக்கும் நாளில்தான் விநாயகர் ஊர்வலம் நடத்த வேண்டும். * விநாயகர் சிலைகளை கரைப்பதில் சுற்றுசூழல் வாரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேற்கண்ட விதிகளை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.