சென்னைக்கு வரும் 4 விமானங்கள் தாமதம், காரணம் தொடர் மழை!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக மும்பை, தில்லி, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வர வேண்டிய 4 விமானங்கள் தாமதமாகியுள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து தில்லி மற்றும் மும்பை செல்லும் 2 விமானங்களும் 3 மணி நேரம் தாமதமாகியுள்ளன. Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
