Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூர்யா தயாரிக்கும் பாண்டிராஜ் - கார்த்தியின் புதிய படம்!

•On November 9, 2017
pandirajkarthi
Share
pandirajkarthi பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் தொடங்கப்பட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. 2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இமான் இசையமைக்கிறார்.
படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும், படப்பூஜையில் சத்யராஜ், சூரி, பானுப்ரியா, சாயிஷா சைகல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் அவர்களும் இதில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. ஒரே கட்டமாக 3 மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடித்து, அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. 'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கிராமத்து பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.