சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்...

நம்ம தமிழ் சினிமா துறையில் ரசிகர்கள் எல்லாரும் சண்டைபோட்டு கொள்வார்கள். ஆனால் நடிகர்கள் ஒன்றாக இருப்பர். இதிலுருந்து முற்றிலும் வித்தியாசமாக ஒன்று இப்பொழுது நடந்துள்ளது. அதாவது நம்ம நடிகர் சூர்யா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். என்ன ஆதரவு என்பத வாங்க படிச்சு தெரிஞ்சுப்போம்.
கடந்த 2009ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பலரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார். இதனால் அப்போது சர்ச்சையும் எழுந்தது. வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரபல பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் பல முக்கிய நடிகர்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக தாக்கி பேசினர். இதனால் ஸ்ரீபிரியா, சத்யராஜ், சூர்யா, அருண் விஜய், விஜய குமார், சேரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
தற்போது நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விஷயம் பெரிதாக தற்போது ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் # ட்ரண்ட் செய்து சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
