சூரையாடப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி : மனிதநேய மக்கள் கட்சி அதிரடி

தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகள் அமைக்கப்பட்ட வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு சுங்க சாவடிகள் அதன் தவணை காலாவதி ஆன பின்பு கூட தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்க சாவடி கடந்த 2019 ஆம் ஆண்டு காலவதியான நிலையில் தற்போது வரை கட்டண வசூலை தொடர்ந்து செய்து வருகின்றன. மேலும் இது போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலாவதியான சுங்க சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் அவற்றை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்க சாவடி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாருல்லா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
அப்பொழுது திடீரென மனிதநேய மக்கள் கட்சியினர் சிலர் சுங்க சாவடி வழியாக செல்லும் வாகனங்களை திடீரென இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் மக்கள் நேய மனித கட்சி நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சுங்க சாவடி 4.5.6 ஆகிய பூத் கண்ணாடிகளை கட்சி நிர்வாகிகள் அடித்து உடைத்தனர். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சில நபர்களை கைது செய்த நிலையில் கட்சி நிர்வாகிகள் போலீஸ் வாகனத்தை மறித்து அவர்களை விடுவிக்க கோரி முற்றுகையிட்டு போலீசார் வாகனகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இதன் காரணமாக சுங்க சாவடியில் இருந்து புலிப்பாக்கம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இதனால் சுங்க சாவடி சார்பில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்காமல் இலவசமாக அனைத்து வாகனங்களையும் அனுப்பி வைத்தனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
