சூரியன் பட இயக்குனரின் புதிய படம்

சூரியன், திருமூர்த்தி, கல்லுரி வாசல், ஐலவ்இந்திய போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பவித்ரன் இயக்கும் புதிய படம் தாராவி!
மும்பையில் தனியார் கேபிள் டிவி. நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலை பார்க்கும் ஐந்து இளைஞர்களை பற்றிய கதை! ஐந்து இளைஞர்களில் ஒருவனை அழகுப்பதுமையான மாணவி காதலிக்கிறாள். அந்த பெண்ணுடைய பெற்றோர்கள் வசதியுடையவர்கள். ஆனால் இவர்களின் காதலுக்கு வேறு ரூபத்தில் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைகளிலிருந்து தப்பித்தார்களா? இல்லையா ? இதுதான் படத்தின் கதைக்களம்.
சதீஷ் பாலா, மும்பை கிருஷ்ணா,பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ, ஆகியோருடன் சைமன் சோமு, மாறன் நாயகம், கதிர், ஷியாம், நடிக்க கதாநாயகியாக சுனுலக்ஷ்மி நடிக்கிறார். இவர் நயன்தார நடித்துள்ள 'அறம்' படத்தில் நடித்துள்ளார்!
இப்படத்திற்கு படத்தொகுப்பு V.T.விஜயன், சண்டை பயிற்சி மும்பை சண்டை மாஸ்டர் அப்பாஸ், பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துள்ள அபய் பவித்ரன், இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் பவித்ரனின் மகன்! இப்படத்திற்கு புளியந்தோப்பு பழனி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு மணிகண்டன் செய்கிறார்.
மும்பையில் தாராவி, மற்றும் தமிழகத்தில் சாயல்குடி போன்ற இடங்களில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.எஸ். இண்டர்நேஷனல் நிறுவனத்திற்காக மும்பை நல்லரசன், பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் தயாரிக்கின்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
