Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சூப்பர்ஸ்டாரின் கட்சிக்கொடி... ரெடி!

•On July 25, 2017
rajni
Share
rajni சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும், அரசியலில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவ்வப்போது கவனித்து வருகிறார். மேலும் கட்சி துவங்குவதற்கான அனைத்து வேலைகளையும், நிதானத்துடன், மக்களுக்கான திட்டங்கள் குறித்தும் அவரே அறிவிக்கயிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த்அவரது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் அப்போது அவர் போர்வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று கூறியதில் இருந்து இன்று வரை அரசியல் பரபரப்பாக இயங்கிவருகுறது. ரஜினிகாந்த் எந்த இடத்திலும் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் ரஜினியின் புதிய கட்சி குறித்து உறுதியாக பேசி வருகின்றனர். tamilaruvimanian முக்கியமாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினியுடன் கூட்டணி வைத்துவிட்டதாகவே அறிவித்துள்ளார். காந்திய மக்கள் கட்சி வரும் 20ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தயிருக்கிறது. அந்த மாநாடே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கும் கூட்டமாக இருக்கும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரஜினி தனது அரசியல் கொள்கைகள், மக்களுக்கான திட்டங்கள், கட்சி, சின்னம் என்று அனைத்தையும் தனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.சரியான நேரத்தில் அதனை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.