Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சுரைக்காய் டீ சாப்பிட்டால் என்னவாகும் தெரிந்து கொள்ள உள்ளே சென்று படியுங்கள்...

•On May 25, 2017
bottle_gourd_tea
Share
bottle_gourd_tea கிரீன் டீ சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் டீ அப்படியொன்றும் ருசிக் குறைவாக இருக்கப் போவதில்லை. சுரைக்காய் பன்னெடுங்காலமாக நம்து நாட்டுக் காய்களில் ஒன்று. இதனை உண்பதால் உடல் ஆரோக்கியத்தில் எதிர்விளைவுகளோ, கெடுதலோ எதுவும் புதிதாக வந்து விடப் போவதில்லை. சிலருக்கு எப்போதுமே கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பிரக்கோலி, இப்படி ஆங்கிலக் காய்கறிகளை உண்பதாகச் சொல்வதே பெருமை என்று நினைத்துக் கொண்டு நமது பாரம்பரிய நாட்டுக்காய்கறிகளை பெரும்பாலும் புறக்கணித்து விட நினைக்கிறார்கள். ஆனால் அவற்றினால் கிடைக்கும் மருத்துவ மகத்துவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அல்லது அனுபவபூர்வமாக உணர்ந்தால் நிச்சயம் தங்களது உணவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பலாம். அந்த வகையில் இப்போது சுரைக்காய் டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். இதை ஏன் சுரைக்காய் டீ என்று சொல்கிறோமெனில் தேயிலையை நீரில் காய்ச்சி வடிகட்டினால் தேனீர் என்கிறோமே அதே ஃபார்முலா தான் இதிலும் பின்பற்றப் படுகிறது. எனவே இதை சுரைக்காய் டீ என்றால் தவறில்லையே! தேவையான பொருட்கள்:- சுரைக்காய் சாறு: 100 மிலி இலவங்கப் பட்டை: 2 துண்டு எலுமிச்சை சாறு: 2 டீஸ்பூன் மஞ்சள் தூள்: சிறிது மிளகுப் பொடி: சிறிது ராக் சால்ட்: கொஞ்சம் செய்முறை:- பிஞ்சு சுரைக்காயாகப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி வந்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். விதைகள் முற்றலாக இல்லையென்றால் அவற்றையும் சேர்த்தே பயன்படுத்தலாம். பின்பு நறுக்கிய சுரைக்காயை மிக்ஸியிலோ அல்லது உங்களுக்கு நேரமிருந்தால் கையடக்கமான சிறு கல் உரலிலோ அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி 100 மிலி அளவுக்கு சாறு எடுக்கவும். பின்பு இதனோடு 2 துண்டு லவங்கப் பட்டை, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து மிதமான சூட்டில் ஆற வைத்து அருந்தலாம். சுரைக்காய் டீயின் பலன்கள்:- உடலில் சேர்ந்த கொழுப்பை எரித்து வெளித்தள்ளும் சக்தி சுரைக்காய்க்கு உண்டு. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. உடற் திசுக்களில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கரைக்கப் பட்டு, தினமும் மலச்சிக்கலின்றி அன்றன்றைய உணவு செரிக்கப் பட்டு வெளியேற்றப் பட்டாலே உடல் இயக்கம் சரியாக இருக்கிறது என்று தான் அர்த்தம். உடல் இயக்கம் சரி வரப் பராமரிக்கப் பட்டால் உடல் பருமன் கூடும் அபாயம் தடுக்கப் படும் என்பது ஒரு எளிமையான லாஜிக். அது மட்டுமல்ல உடல் உள்ளுறுப்புகளில் குறிப்பாக குடலில் புண்கள் வராமல் காக்கும் சக்தியும் சுரைக்காய்க்கு உண்டு என்பதால் தினம் ஒரு வேளை காலையில் மட்டும் இந்த சுரைக்காய் டீ எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் எடை குறையும் என சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல இது ஒரு வகையான பாட்டி வைத்திய முறையும் கூட என்பதால் இதனால் மோசமான பின்விளைவுகள் எதுவும் ஏற்பட்டு விடக் கூடும் என்ற அச்சமின்றி இதைப் பின்பற்றலாம்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.