சுராஜ் படத்தில் ஜெயம் ரவிக்கு இன்னொரு ஜோடி த்ரிஷா..!

சுராஜ் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் ஏற்கனவே அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு பாடல் தவிர அஞ்சலி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
தற்போது இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக த்ரிஷாவும் உள்ளே நுழைய இருக்கிறார். அஞ்சலி கிராமத்துப் பெண்ணாக நடிப்பதால் நகரத்து நவ நாகரிக மங்கையாக நடிக்க நல்ல ஒரு ஸ்டைலிஷான அழகான நடிகையை தேடியவர்களின் கண்களில் த்ரிஷா பட, அவரை அந்த கேரக்டரில் பிக்ஸ் செய்துவிட்டார் சுராஜ்.
சம்திங் சம்திங், பூலோகம் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார் த்ரிஷா.. ஆகஸ்ட்-10ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ஆனால் அஞ்சலி, த்ரிஷா இந்த இருவரில் யாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதெல்லாம் சஸ்பென்ஸ்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
