சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

[embed]https://twitter.com/Udhaystalin/status/940828968789446657[/embed]
'நிமிர்' படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை சீனுராமசாமி இயக்க உள்ளார். இந்த தகவலை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்து வருகிறார். இது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
