Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிவனடியார் ஆறுமுக சாமி மறைவுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...

•On April 9, 2017
Stalin (1)
Share
Stalin (1) தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுக சாமி இயற்கை எய்தியை செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவாக இருந்த இவர் காலமானது தமிழுக்கும், தமிழுணர்வுக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. சிவனடியாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழுணர்வு மிக்க சொந்தங்களுக்கும், சக சிவனடியார்களுக்கும் தலைவர் கலைஞர் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.