Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' பட டீசர் நாளை வெளியீடு

•On August 13, 2017
velai postar
Share
velai postar மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிவகார்திகேயனை மையப்படுத்தி வெளியானது. அதன் பின்னர் பகத் பாசிலின் பிறந்த நாளன்று அவரை மையப்படுத்தி போஸ்டர் வெளியானது. நேற்று முன்தினம் நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் உள்ள போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது. ஆயுத பூஜை அன்று வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது. இந்த படத்தை 24 ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.