Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிரஞ்சீவியுடன் இணையும் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி!

•On August 22, 2017
amiththa
Share
amiththa இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நரசிம்ஹா ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறை முதல்முறையாக திரைக்கு கொண்டு வரும் படம் சை ரா. இந்தப் படத்தை, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்க, சிரஞ்சீவி நரசிம்ஹா ரெட்டியாக நடிக்கிறார். syeraaa சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று, படத்தின் முதல் பார்வை மற்றும் படக்குழு பற்றிய விபரம் வெளியிடப்பட்டது. இதில் சிரஞ்சீவியோடு, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஜகபதிபாபு உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, ராஜீவன் கலை என மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகிறது. சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். அதனொக்கடே, கிக், ரேஸ் குர்ரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. மேலும், ராம்சரண் நடித்த த்ருவா (தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்) படத்தையும் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.