Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

“சிபிராஜ்கிட்ட சொல்லிடாதீங்க” – விஷாலிடம் சத்யராஜ் வேண்டுகோள்

•On October 6, 2014
CutPicture.com_2014-Oct-06_02_12_01
Share

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘பூஜை’ படத்தில் சத்யராஜுக்கு மிக முக்கியமான போலீஸ் அதிகாரி வேடம். அதிலும் மொட்டைத்தலையுடன்.. சினிமாவில் கேரக்டருக்காக மொட்டையடிக்கும் பழத்தை துவக்கிவைத்த சத்யராஜுக்கு இது எத்தனாவது மொட்டையோ தெரியவில்லை..? இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய சத்யராஜ், “இந்தப்படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு ஒரு ராணுவ கேம்ப்பில் இருப்பதுபோல எல்லாமே சரியாக சொன்னது சொன்ன நேரத்திற்கு நடந்தது.. அப்படி இருப்பதுதான் எனக்கும் பிடிக்கும்.. இருந்தாலும் விஷாலும் நானும் நிறைய நேரங்கள் வெட்டி அரட்டை அடிப்போம்.. நானும் யூத் லெவலுக்கு இறங்கி பேசுவேன். ப்ளீஸ் விஷால் அதையெல்லாம் சிபிராஜ்கிட்ட போட்டுக்குடுத்துடாதீங்க..” என பயந்தபடி அருகில் இருந்த விஷாலிடம் வேண்டுகோள் வைத்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.