Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சின்னத்திரை சீரியலில் நடிக்க விருக்கும் "கோ" பட கதாநாயகி...

•On June 9, 2017
karthika1_1896770g
Share
karthika1_1896770g முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. ‘கோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றிப் படம்தான் ஆனாலும் அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்தில் நடித்தார். அது படு பயங்கர தோல்வியடைந்தது. ‘புறம்போக்கு’ படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ‘வா டீல்’ படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் கார்த்திகா சின்னத்திரையில் நடிக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதிய ‘ஆரம்ப்’ என்ற சரித்திரக் கதை. இந்தியில் தொடராக தயாராகிறது. இதில் கார்த்திகா தேவசேனா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் ரஜனீஷ் துக்காலு ஹீரோவாக நடிக்கிறார்.பிரமாண்ட பட்ஜெட்டில் திரைப்படத்துக்கு நிகராக இந்த தொடர் தயாராகி வருகிறது. இந்த தொடர் வருகிற 24ந் தேதி முதல் ஸ்டார் பிளஸ் சேனல்களில் ஒளிபரப்பாகிறது. இந்தியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 50 எபிசோட்களுக்கு பிறகு பிற பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதாக சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.