Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சினிமா டிக்கெட்டுகள் விலை அதிரடி குறைப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி..!

•On December 24, 2018
asdf
Share
மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 31ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இந்தக்கூட்டத்தில், 28 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் உள்ள பொருட்களை 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்த பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.