சிக்ஸ் பேக் வைத்துள்ள நடிகை ரெஜினா!...

சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே தமிழ் நடிகை ரெஜினா மட்டும் தான் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் சரவணன் இருக்க பயமேன். இதில் ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே ஹீரோயின்களாக நடித்துள்ளனர். படம் குறித்து பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவிலேயே ஹீரோயின்களில் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் நடிகை ரெஜினா தான் என்று கூறியுள்ளார்.
செட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும் ரெஜினா, அதிகமாக உடற்பயிற்சி குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் தான் பேசுவார் என்று உதயநிதி கூறியிருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள் போன்று ரெஜினாவும் தவறாமல் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் செய்யும் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
