Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘சிகரம் தொடு’ ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்..!

•On August 7, 2014
sigaram thodu
Share

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிகரம் தொடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்தப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மோனல் கஜ்ஜர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் கமல், கே.ஜே.ஜேசுதாஸ், பிரபு, தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், பார்த்திபன், லிங்குசாமி, பிரபுசாலமன், ஏ.எல்.விஜய், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

‘உத்தம வில்லன்’ படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் விழாவில் கலந்துகொண்டு விக்ரம் பிரபுவை வாழ்த்துவதற்காகவே வந்திருந்தார் உலக நாயகன் கமல்.

எல்லோரும் பேன்ட் அணிந்து வந்திருக்க தனுஷ் மட்டும் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்திருந்தார்..

பக்கத்தில் அமர்ந்திருந்த சத்யராஜிடம் தன் மகன் விக்ரம் இன்னும் சரியாக டான்ஸ் ஆடவில்லையே என குறைபட்டுக்கொண்டாராம் பிரபு.. ஆனால் படத்தின் இரண்டு பாடல்களை போட்டுக்காட்டியவுடன் மேடையேறிய சத்யராஜ் பிரபுவை பார்த்து “என்ன தலைவரே இப்ப என்ன சொல்றீங்க.. விக்ரம் பிரபு பிச்சு உதறிட்டாருல்ல” என பாராட்டினார்.

பார்த்திபன் படக்குழுவினரை வாழ்த்தி பேசிவிட்டு அப்படியே தனது படமான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை வரும் ஆகஸ்ட்-15 அன்று ‘அஞ்சான்’ படத்துடன் ரிலீஸ் செய்வதாக அறிவிப்பும் வெளியிட்டார்.

வழக்கமாக இதுபோன்ற விழாக்களை தொகுத்து வழங்கும் விஜய் டிவி ரம்யா இல்லாமல், இந்தமுறை விஜய் டிவி மகேஷ் தொகுத்து வழங்கியது நன்றாக இருந்ததுடன் பார்வையாளர்களின் கைதட்டலையும் அள்ளியது. மகேஷ் இந்தப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.