Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

‘சிகப்பு ரோஜாக்கள்’ ரீமேக் எடுபடுமா..?

•On August 27, 2014
Sridevi Kamal Haasan Sreedevi
Share

பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளியான ‘சிகப்பு ரோஜாக்கள்’ திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. கிராமத்தை சுற்றிவந்த பாரதிராஜா சிட்டி சப்ஜெக்ட்டில் அதுவும் த்ரில்லர் ஏரியாவில் விளையாடியிருந்தார். சீரியல் கில்லராக கொடூர முகம் காட்டியிருந்தார் கமல். இந்தப்படத்தின் கதையை நமது திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் எழுதியிருந்தார்.

அந்தப்படத்தை கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்போகிறார் பாரதிராஜாவின் மகனான மனோஜ் கே.பாரதி. இதில் பாரதிராஜாவும் ஒரு முக்கிய கேரக்டரில் திரைப்பட இயக்குனராகவே நடிக்க இருக்கிறாராம். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை தொடர்ந்து பல படங்கள் அதே சாயலில் வெளிவந்துவிட்டன.

சொல்லப்போனால் இந்த மாதிரி படங்கள் வெளியாகும்போதெல்லாம் அது ‘சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இருக்கிறதே என பலமுறை சொல்லப்பட்டதுண்டு.. அதனால் இந்த முறை சிகப்பு ரோஜாக்களையே ரீமேக் செய்யும்போது அந்த மாதிரி பத்தோடு பதினொன்றாக போகவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் கமல், ஸ்ரீதேவி இடத்தில் யாரையும் தற்போது நினைத்து பார்க்கவும் முடியவில்லை.. சரி.. நடப்பது நடந்துதானே தீரும்..?

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.