Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சாலையில் பைக் ரேஸ் நடத்துபவர்களுக்கு துல்கர் சல்மான் சொல்லும் அறிவுரை..!

•On August 16, 2014
Dulquer-Salman
Share

இன்று மக்கள் நடமாட்டமுள்ள சாலைகளில் பைக் ரேஸ் நடத்துவதால் ஏற்படும் விபத்துகளை பற்றி அடிக்கடி செய்திகளில் படிக்கிறோம் தானே.. இளமை துள்ளலில் சாகசம் செய்ய அலைபாயும் மனது ரோடு என்றோ, வீடு என்றோ பார்க்குமா.? அதன் விளைவுதான் இந்த விபத்துகள்.

மலையாள இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மானின் படங்களில் அவர் பெரும்பாலும் பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் உள்ளவராக நடித்திருப்பார்.. அவ்வளவு ஏன்.. ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தில் பைக் ரேஸராக நடித்திருந்தார் துல்கர். அவர் தான் இப்படி சாலையில் பைக் ரேஸ் விட்டு விபத்துகளை உண்டாக்கும், விபத்தில் சிக்கும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்..

“சினிமாவில் காட்டப்படுவது போல பைக் ரேசில் ஈடுபட முயல்பவர்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் முறையான பயிற்சியாளரும் பாதுகாப்பும் இன்றியோ அல்லது மக்கள் நடமாடும் இடங்களிலோ பைக் ரேசில் ஈடுபடுவதாக காட்டமாட்டோம்.. அப்படி ஈடுபடவும் மாட்டோம். அதனால் தயவுசெய்து முறையான பயிற்சியுடன் மற்றவர்களுக்கு ஆபத்தில்லாத வகையில் பைக் ரேசில் ஈடுபடுங்கள்” என கூறியுள்ளார் .

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.