Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சர்கார் சக்ஸஸ் பார்ட்டி : மீண்டும் 'அதிமுக'வை சீண்டும் சர்கார்..!

•On November 12, 2018
சர்கார்
Share
விஜய் நடித்து வெளிவந்த சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற அரசின் இலவச பொருட்களை எரிக்கும் காட்சி, வில்லி வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை சூட்டி இருந்தது போன்றவை அரசியல் வட்டாரத்தில் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் போராட்டங்கள் வெடித்து, வேற லெவல் பப்ளிசிட்டி சர்கார் திரைப்படத்தை வந்து சேர்ந்தது. இதனால் இத்திரைப்படத்தின் வசூலும் எக்கச்சக்கமாக எகிறி இருக்கும் நிலையில், அப்படத்தின் வெற்றி கொண்டாட்டமானது நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. A.R. முருகதாஸ், விஜய், A.R. ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலக்ஸ்மி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மிக்சி, கிரைண்டர் உருவங்கள் இடம் பெற்ற கேக்கானது வெட்டப்பட்டது. பிரச்சனைக்கு காரணமே அந்த மிக்சி, கிரைண்டர்தான் எனும் நிலையில், படத்தில் மட்டும் நீக்கி விட்டு, சக்ஸஸ் பார்டி வைத்து அதிமுக ஏற்படுத்திய சர்ச்சையை சிம்பாலிக்காக கொண்டாடி, சைலண்டாக சீண்டி இருக்கிறது சர்கார் படக்குழு.  ,
 ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.