சரவணன் இருக்க பயமேன் கதாநாயகி அழகின் ரகசியம் இதுதான்...

நடிகை ரெஜினாவை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடயே நன்கு பிரபலமாக்கியாவர் இயக்குனர் பாண்டியராஜன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். அதற்கு முன்பே சில படங்களில் நடித்தபோது இந்தப் படம் மூலம் அவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அயைடுத்து ‘ராஜதந்திரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்பட சில படங்களில் நடித்த ரெஜினா. இன்னும் அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில், தனது அழகை பராமரிப்பதில் அவர் அதிகப்படியான அக்கறை எடுத்து கொள்கிறார்.
இதுபற்றி ரெஜினா கூறும்போது:- நான் எப்போது நடிகை ஆனேனோ அப்போது இருந்தே டயட்ஸ் கடைபிடித்து வருகிறேன். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வேன். அதோடு, ஜூஸ் அயிட்டங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் எனக்கு யோகா, தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ளது.
நான் அவுட்டோர் படப்பிடிப்புகளின் போது தங்கும் வசதி உள்பட, யோகா செய்வதற்கு காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்வதில் முதல் கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற விசயங்களை நான் தவறாமல் கடைபிடித்து வருவதால் தான் என் அழகு மெருகேறிக்கொண்டே வருகிறது’’ என்கிறார் நடிகை ரெஜினா.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
