Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சத்யராஜ் , சசிகுமார் நடிப்பில் வெளிவருகிறது எம்ஜிஆர் மகன்

•On April 16, 2021
MGR Magan
Share

தந்தையாக சத்யராஜ், அவருக்கு மகனாக சசிகுமார் நடிக்கும் "எம்ஜிஆர் மகன்".

ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் "எம்ஜிஆர் மகன்". இப்படத்தில் சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பழ கருப்பையா, சிங்கம் புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நந்திதா சுவேதா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

பொன்ராம் இப்படத்தை இயக்குகிறார். தனது முந்தைய திரைப்படங்களான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" மற்றும் "சீமராஜா" ஆகிய மூன்றிலுமே குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாக தந்தவர் இயக்குநர் பொன்ராம்,

படத்தை பற்றி உற்சாகத்துடன் பேசும் பொன்ராம், “ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும் -மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜும், மகனாக சசிகுமாரும், தாயாக சரண்யா பொன்வண்ணனும், தாய்மாமனாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் அனுப்பிரியா (மிருணாளினி ரவி), எம்ஜிஆர்-அன்பளிப்பு ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரை டவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,” என்றார்.

100 சதவீதம் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் வகையில் எம்ஜிஆர் மகன் உருவாகியுள்ளது. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று நம்பிக்கையோடு கூறுகிறார் பொன்ராம்.

தயாரிப்பு நிறுவனம்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட்
இயக்குநர்: பொன்ராம்
ஒளிப்பதிவு: வினோத் ரத்தினசாமி
இசை: அந்தோனி தாசன்

சண்டை காட்சிகள்: ஸ்டண்ட் சில்வா
நடனம்: தினேஷ், பிருந்தா, தினா
பாடல்கள்: யுகபாரதி, அந்தோனி தாசன், கடல் வேந்தன், முருகன் மந்திரம்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.