சதீஷை கல்யாணம் பண்ண வாக்கு கொடுத்த சமந்தா..!

சதீஷை கல்யாணம் பண்ண வாக்கு கொடுத்த சமந்தா..!
‘கத்தி’ படத்தில் விஜய்க்கு நண்பனாக நடிக்கும் அளவுக்கு புரமோஷன் ஆகியிருக்கிறார் காமெடி நடிகர் சதீஷ். அவரது ஊரில் விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ ரிலீசான சமயத்தில், படத்திற்கு போஸ்டர் ஓட்டும்போது கூடவே சுற்றியவர், இன்று விஜய்யுடன் நடிப்பதை அவரால் நம்பவே முடியவில்லை என்கிறார்.
நேற்று ‘கத்தி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போதுதான் இந்த தகவலை தெரிவித்தார் சதீஷ்.. அவரிடம் விழாவை தொகுத்து வழங்கிய ம.க.ப, “உங்களுக்கு பொண்ணு பார்க்கிறார்களாமே.. எப்படிப்பட்ட பொண்ணு வேண்டும்” என கேட்டார்.
அதற்கு சதீஷ், “சமந்தா மாதிரி ஒரு பொண்ணுதான் வேணும்ன்னு ஏற்கனவே ரெண்டு பங்ஷன்ல சொல்லிருக்கேன்.. அதையே தான் இப்பவும் சொல்றேன்” என்று சொல்ல சமந்தாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. மேடையில் சமந்தாவின் முறை வந்தபோது சதீஷை பார்த்து, “கவலைப்படாத சதீஷ்.. உன்னைய நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என ஒரு போடு போட்டாரே பாருங்கள்.. அவ்வளவுதான் நேற்றிரவெல்லாம் சதீஷ் தூங்கியே இருக்கமாட்டார் போங்கள்..
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
